தொழுதாலும் தொலையாது

துணையாக வரவேண்டும் வேல்முருகா - என்
வினையாவும் களைந்திடவே அருள் தருவாய்

அறிவோடு நான் செய்த பிழைகள் யாவும் - என்
ஆணவத்தால் வழி வந்த நிலையேயாகும்

மலமான மனத்தாலே குணமிழந்து - என்
குன்றான வாழ்வுதனை முழுதிழந்தேன் - உனை

தொழுதாலும் தொலையாது எந்தன் பாவம்
துணிவோடு வேண்டுகின்றேன் நித்தம் நானும்

அடியார்க்கு உதவுகின்ற ஆதித் தமிழா - உன்
மிதியடியாய் மாறுகின்ற வரத்தை அருள்வாய்
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-May-19, 5:51 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 87

மேலே