அடுக்கடுக்காய் அழகாய்

அளையினூடே அலையை உருவாக்கி
அன்பானவர்களை அழகுற அழைத்து

கிலியின்றி உலகில் கிளிபோல் வாழ
பழிகளை எல்லாம் கிழி கிழியென கிழித்து

இலைகாய்க்கும் மரத்தோடே
இழையென இணைந்து இளைக்கா உடலோடு

தளை தாண்டாமல் தலைமையோடு
தழைக்குக் கூட துயர் செய்யாமல்

ஒளியுள்ள வாழ்வை ஒலிக்கச் செய்து
ஒவ்வொரு துயரையும் ஒழித்துக் கொண்டு

களித்து கழிமுகார மீன்போலே
கலி பலவற்றை வென்று வாழ்ந்து

வளி போலே வலிமை பெற்று
தனி வழியே தனித்து நின்று பலங்கட்டி

வாலில் பலங்காட்டி வரலாறு படைத்து
வாளாயுதம் தாங்கி வாழ்ந்த அனுமனை போற்றுவோம்
- - - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-May-19, 10:17 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 85

மேலே