ஒருமுறை மன்னிப்பாயா

ஒருமுறை மன்னிப்பாயா ஒரு முறை அவளின் சிவந்த கன்னத்தில் படர்ந்தன என் கைவிரல்கள்.... மிஞ்சியது அவளின் சொற்கணைகள் வாய்ப்பில்லை , எனக்கும் வேறுவழி தெரியவில்லை. அதற்காகவே நித்தமும் மௌனநிலை, காலை முதல் மாலைவரை இதுதான் என் அவளின் நிலை, எனது அவலநிலை. காலையில் காப்பி டம்ளர் படார் என சத்தம் என் மேசை மீது... என்னிடம் கோபித்து கொண்டு இட்லியையும் தொலைவில் வைக்கிறாள்... வேலைக்கு செல்கிறேன் என்று கூறியும் எந்த பாவமும் இல்லை அவள் முகத்தில். நான் வீடு திரும்பியும் அவள் நிலை இன்னும் திரும்பவில்லை. முன் அறையில் எழுந்து சென்று விட்டால் என்னைக் கண்டதும். என் அவளை நான் ஒரு முறை தண்டித்தேன், அவளோ என்னை பல முறை வஞ்சிகின்றாள் . என் மனம் அவளிடம் மீண்டும் பேச அடம் பிடிக்கிறது சின்ன பிள்ளை போல். ஒரு முறை மன்னிப்பாயா

எழுதியவர் : Santhoshkumar (11-May-19, 6:57 am)
சேர்த்தது : santhoshraj
பார்வை : 177

மேலே