காதல்
மனம் கவர்ந்த மன்னவன் வாராது போக
மங்கை மனம் பேதலித்து போனது
செய்வதறியாது நின்றாள் செயலிழந்து
பின்னர் ஓடினாள் மணாளனைத் தேடி
பூஞ்சோலையில் பூக்களைக் கேட்டாள்
என்னவனைக் கண்டீரோ நீங்கள் என்று
சோலைக்குயலைக் கேட்டாள்,'கூவும்
குயில்களே என் காதலனை கண்டீரோ என்று
ஓடும் நதியைக் கேட்டாள்' நதியேநீ
கண்டாயோ என்னவனை ஓடத்தில்
இன்று சென்றானோ உன் மீது' என்று
பாதையில் தெரிந்த அத்தனைப் பொருட்களையும்
இப்படியே கேட்டுக்கொண்டே சென்றாள்
பித்துபிடித்தவள் போல் இறுதியில்
அந்தி மயங்கும் வேளையிலே கை கால்
ஓய்ந்துபோக கண்பார்வை குன்ற
நெஞ்சும் படபடக்க நங்கை அவள்
தட்டுத்தடுமாறி தரையில் வீழ
வீழ்ந்தால் அங்கு அவன் கைகளில்
அவனென்று தெரியாது ….. கண் விழித்து
பார்க்கையில் அவள் கண்முன் அவனே
அவன் கைகளில் இவள்.,,,,,,,,,,,,,,,,,,,
இப்போது நெஞ்சம் நிறைந்தாள்
தேடிவந்த Selvam கிடைக்க