கற்றவனே மேல்

படிப்பை முழுமையாய்
படித்து முடித்தபோதும்,
மருத்துவரும், வக்கீலும்
முழு பொறுப்பு இல்லாத
பயிற்சியாளராகத்தான்
பணியில் சில காலம்
பணிபுரிய வேண்டும்

பாராள வருவோர்க்கு
படிப்பு முக்கியமல்ல,
நல்ல நேர்மையும்,
நாட்டு மக்கள் நலத்திலும்
படித்த அறிவோ, பட்ட அறிவோ
ஏதுமில்லாம—சமூகம்
எப்படி ஏற்றுக்கொள்கிறது?

வாழும் மக்களுக்கு
உணவும், நல்ல குடிநீரும்,
படிப்பும், வேலையும்
நலம் காக்க சுகாதாரத்தையும்
உறுதிபடுத்துவது இவர்களின்
முக்கிய கடமையல்லவா?--தவறினால்
மரியாதைக் குறையாதோ?

தேர்த்திருவிழா போல
தேர்தல்கள் வந்து போகும்,
குழந்தைகள் பெறும் காசு போல
கைமாறும் பணத்தால் சில நாட்கள்
வயிறு நிறையும், மனசு மாறும்
மக்களுக்கு இது வாடிக்கை,
ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக்
கொற்றவனைவிட கற்றவனே மேல்.

எழுதியவர் : கோ. கணபதி. (19-May-19, 8:29 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 39

மேலே