காலமது கனிந்து வந்தால்

வேகங் கொண்ட பூமியிலே
வேகமாய் தினம் ஓடுகிறோம்
வேலை பல செய்கின்றோம்
வேதனைகளை சுமக்கின்றோம்

காசுக்காய் உழைக்கின்றோம்
காலங்களை தொலைக்கின்றோம்
ஈசல் தேகம் எடுத்துக் கொண்டு - கதிரின்
வாசல் தொட முயல்கின்றோம்

வியக்கியானம் பேசிக் கொண்டு
வேண்டாததைச் செய்கிறோம்
கொண்ட வாழ்வை வாழாமல்
கோல் மூட்டித் திரிகின்றோம்

நீர்க் கொண்ட மேகமது
நெடுந்தூரம் பயணிப்பினும்
./காலமது கனிந்து வந்தால்
கார் மழை பொழிவதைப் போல்

நீ செல்லும் பாதை தோறும்
நல்லதை செய்துக் கொண்டு
நிம்மதியாய் வாழ்வைக் கண்டு
நெடு நாட்கள் வாழ்ந்து மகிழு.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-May-19, 9:57 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 51

மேலே