கலைந்து போனது

தேர்தலுக்கு ஓட்டு கேட்க
தெருவுக்கு வந்த பேச்சாளர்
பேப்பரை எடுத்து
பேச ஆரம்பித்து
நெஞ்சைத் தொடும் வண்ணம்
நெகிழ்ச்சியோடு பேசுகையில்

கூட்டத்தில் நின்ற பாதி பேர்
கூக்குரலிட்டு ஓலமிட
பேச்சாளர் கோபமுற்று
பேச்சை நிறுத்தி விட்டு
கூட்டத்தில் இருப்போரில் பாதி பேர்
கழுதைகள் என்றார்

தெருவில் நின்றோரில் சிலர்
தரக்குறைவான
இச்சொல்லைத்
திரும்பப்பெறவேண்டுமென்றும்
மன்னிப்பும் கேட்க வேண்டுமென
முறையிட்டனர்

மரியாதைக்குரிய பேச்சாளர்
மன்னிப்புக் கேட்பது போல்
பேச்சைக் கேட்க வந்தவர்களில்
பாதி பேர் கழுதைகளல்ல என்றார்
கலாட்டாவைக் கைவிட்டனர்
கூட்டம் கலைந்துபோனது

எழுதியவர் : கோ. கணபதி. (19-May-19, 8:32 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : kalaindu ponathu
பார்வை : 25

மேலே