காசுவாய் உருவெடுத்த

காகிதமாம் காகிதம்
கணக்கற்ற காகிதம்
காசுவாய் உருவெடுத்த
கச்சிதமான காகிதம்

காலமெல்லாம் சாமியாக
காட்சித் தரும் காகிதம்
கடன் வாங்கும் நபருக்காக
கடமையாற்றும் காகிதம்

கடந்த கால வரலாற்றுக்
கதையைக் கூறும் காகிதம்
கற்றறிய மாந்தர் கையில்
புத்தக வடிவில் காகிதம்

சட்டம் திட்டம் எதுவென்றாலும்
தனக்குள் கொள்ளும் காகிதம்
பல நாட்டு மொழிகள் வாழ
அச்சாணியாய் இன்று காகிதம்

அர்த்தமுள்ள சொற்களையும்
ஆபாசமான படங்களையும்
அங்கிகரிக்கும் காகிதம் -உலகை
ஆளுகின்ற காகிதம் ஆற்றல் வாய்ந்த காகிதம் .
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-May-19, 10:34 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 15
மேலே