இறைவா

குப்பைத் தொட்டியில்
குழந்தை அழைத்தது!
வறுமை பசியிலே
வயிறு அழைத்தது!
தனிமை தீயிலே
ஏக்கம் அழைத்தது!
வலியில் துடிக்கையில்
வாயும் அழைத்தது!
அழைத்து அலுத்துமே,
இல்லை நீயென,
காருடை நானென,
என்னுள் எண்ணிட...
உதவும் கைகளே
உண்மை சொன்னது!
மனிதம் நீயென
இறைவா!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (21-May-19, 12:49 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : iraivaa
பார்வை : 2212

மேலே