நீயும் நானும் அன்பே
நிலவு நீ!
மேகம் நான்!
வானமாய் நம் காதல்!!!
திசை நீ!
பாதை நான்!
பயணமாய் நம் காதல்!!!
இதழ் நீ!
முத்தம் நான்!
காமமாய் நம் காதல்!!!
பேனா நீ!
காகிதம் நான்!
கவிதையாய் நம் காதல்!!!
படகு நீ!
துடுப்பு நான்!
கடலாய் நம் காதல்!!!
உடல் நீ!
உதிரம் நான்!
உயிராய் நம் காதல்!!
நான் நீ!
நீ நான்!
நாமாய் நம் காதல்!!!
கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான் ❤