துள்ளுசிசியா

துள்ளுசிசியா?
@@@@@@@@@@@@@@
அடியே எஞ் செல்லக் கொள்ளுப் பேத்தி தொளசி, என்னடி துள்ளிட்டு திரியற? இங்க வாடி. வடக்க போயி ஆறு மாசம் வேலை பாத்துட்டு வந்து இந்தப் பாட்டியக் கண்டுக்கவேமாட்டங்கறே.
@@@@@@@@
கொள்ளுப் பாட்டி, உங்க பேரன் அணில்ராஜும் அவுரு மனைவி என்னோட அம்மா சுகிர்தாவும் எனக்கு வச்ச பேரு பெருமாளுக்குப் பிடிச்ச துளசி. நீங்க என்ன நான் தமிழ் நாட்டில இருக்கற வரைக்கும் ’தொளசி, தொளசி’ன்னு கூப்புட்டு அசிங்கப் படுத்தினீங்க. வங்கி அதிகாரியா பதவி உயர்வு பெற்று பீகார் போனதுக்கப்பறம் அங்க உள்ள இந்திக்காரங்களால் ’துளசி’ங்கற பேரச் சரியா உச்சரிக்க முடியல. ‘துள்சி’ன்னுதான் கூப்புடுவாங்க. அவங்க வழக்கப்படி பேருகூட ‘ஜி’ சேத்துக்குவாங்க. என்ன அங்க ‘துள்சிஜி’ன்னு தான் கூப்புடுவாங்க. அப்பறம் ஆந்திராவில என்ன ‘துளசிகாரு’ன்னு கூப்புடுவாங்க.
@@@@@
வடக்க நீ ‘துள்ளுசிசி’. ஆந்திராவில நீ ’துளசிகாரு.’ நல்ல ‘காரும்’ ‘சிசி’யும். எல்லாம் காலம் கெட்டுப்போச்சுடி ’துள்ளுசிசி, தொளசிகாரு’. எத்தன லட்சத்துக்கு வாங்கின காரோ?

எழுதியவர் : மலர் (26-May-19, 10:55 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 40

மேலே