நீல்கண்ட்

டேய் நீலகண்டா, வாடா மைதானத்துக்குப் போயி மட்டையாட்டம் (கிரிக்கெட்) விளையாடலாம்.
@@@@@@@@
போங்கடா போக்கத்த பயல்களா! மைத்தானத்துக்கு எதுக்குடா? தெருவிலே மட்டையாட்டம் வெளையாடி மத்தவங்களுக்கு இடையூறு செய்யறதில கெடைக்கற சந்தோஷம் வேற எதுலயும் கெடைககாதடா பயல்களே. தெருவில நாம மட்டையாட்டம் வெளையாடறதுக்கு நம்ம பெற்றோர்கள் ஆதரவு இருக்கற வரைக்கும் நம்மக் கவலையில்லைடா. சரீ உங்க பேருஙிகளச் சொல்லுடங்கடா.
@@@@@@@
சுரேஷ், நரேஷ், கமலேஷ், சூர்ஜ், தீரஜ், ஹர்மன்.
@@@@@@@
ஏண்டா பயல்களா உங்களுக்கு மட்டும் தூய்மையான இந்திப் பேரு. எம் பேரு சாமி பேரா இருந்தாலும் தமிழக்கம் செய்யப்பட்ட இந்திப் பேரு. எனக்குக் கேவலமா இருக்குதடா. நானும் எங்கப்பாகிட்டச் சொலி எம் பேர ‘நீல்கண்ட்’ன்னு மாத்திக்குவேன். அதுக்கப்பறம் என்ன ‘நீல்கண்ட்”ன்னு கூப்படாம எவனாவது என்ன ‘நீலகண்டா’, ‘நீலகண்டன்’ன்னு கூப்புட்டீங்களா உங்க மூஞ்சி மொகறை எல்லாம் பேத்துப்போடுவேன். சாக்கிரதை/

எழுதியவர் : மலர் (26-May-19, 12:10 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 56

சிறந்த நகைச்சுவைகள்

மேலே