“உம்மை நான் பார்க்கவே இல்லை” - ஓய்வின் நகைச்சுவை 168

ஓய்வின் நகைச்சுவை: 168
“உம்மை நான் பார்க்கவே இல்லை”

நண்பன்: 1 என்ன ஒய்! ஒரே குழப்பமா இருக்கீர்?

நண்பர்: 2 என்ன செய்வது ஒய்! அடுத்த மாதம் ரெட்டீர் ஆகிடுவீங்க இன்னைக்கு நாள் நல்லா இருக்கு கல்யாணம் பண்ணிடுவோமேன்னு , ஆஃபீசிலே கூட வேலை பாக்கிற தங்கம், சொல்கிறாள். என் வீட்டுக்காரி இன்னைக்கூட நல்ல நாள்தான் தங்கம் வாங்கலாம்னு சொல்றாள் என்ன செய்ய? “தங்கத்தை” வாங்கவா, கட்டவா?

நண்பன்: 1 ஒய்! நான் இந்த விளையாட்டுக்கு வரலே எனக்கு இந்த விஷயம் முன்னமே தெரியு முன்னு மாமிக்கு தெரிந்தால் என்னை புடம் போட்டு கம்பியாய் திரிச்சி தொங்க விட்டுவாள். நீர் சொன்ன எதுவுமே நேக்கு கேட்கலை! உம்மை நான் பார்க்கவே இல்லை வாரேன்!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (25-May-19, 11:36 am)
பார்வை : 98

மேலே