டமார்

அப்பா...சொல்லு..

பா..பா..

அப்பா...அப்பா ...சொல்லுடா தங்கம்.

ப்பா..

பாருடி..கொழந்தை அப்பா சொல்றது.

ம்மா...ம்மா...

அது என்னத்தான் கூப்படறது...உங்களை இல்ல...

தாத்தா பாட்டிதான் சீக்கிரம் வரும். நேக்கு அதான் முதலில் வந்ததாம். அம்மா சொல்லிண்டே இருப்பள்.

எங்காத்துல மாமா அத்தைதான் மொதலில் வரும்பா...

போங்கோ...பால் காயறது...

*************************************

ஏன்னா இந்த ஸ்கூலில் சேர்க்கவா?

ம்

எல்கெஜி யூகேஜி க்கே லக்ஷம் ஆகுமே.

போறதுடி. கொழந்தை நன்னா படிக்கும்.

நான் பியே பொஸ்தகம் பஸ் சார்ஜ் எக்ஸ்சாம் பீஸ் மொத்தமே ஆறாயிரம் மட்டும் ஆச்சுண்ணா..

அது அந்த காலம் . இப்போ எத்தனை படிக்கணும். பவுண்டேசன் ஸ்டராங்கா இருக்கணும்.

இருந்தாலும் நேக்கு இது ரொம்ப அதிகமா படறது. கொஞ்சம் வேற ஸ்கூல் பாப்போம்.

நேக்கு சரின்னு படறது. வேற பேசலாம்.

*************************************

ஏண்டி உம் பையன் ப்ளஸ்டூ ல டாப் மார்க் எடுத்துருக்கன். அடுத்து என்னடி?

தெரியலை மாமி...ஆத்துகாரரை கேக்கணும்.

நீங்க கஷ்டப்பட்டது வெடிஞ்ஜூடுத்துனு வச்சுக்கோடி...ஏண்டி கண் தளும்பறது..
அசடு...பகவான் இருக்கார்.

குழந்தை ஷேமமா இருந்தா போதும் மாமி.

இனிமே நோக்கோன்னும் கவலை இல்லடி. உன் ஆத்துக்காரர் வைராக்கியம் பிடிச்சவர். உன் பிள்ளையாண்டானும் சமத்து. தேஜஸ்வி.

இது போதும் மாமி. ஒரு நல்ல காலேஜில் சேர்த்துட்டா பெருமாளுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை பண்ணிட்டு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சார்த்திடுவேன். நாங்க பழைய சாதம் மோர் மிளகாய் சாப்டுப்போம். பழகினதுதானே எல்லாம்.

கிலேசம் ப்டாது. கேட்டியோ...

**************************************

அப்பா...

சொல்லுடா ராஜா...

புனே ல ஒரு ப்ரைவேட் காலேஜில் மானேஜ்மெண்ட் கோர்ஸ் இருக்கு.

ஜாயின் பண்ணிக்கோ

ரொம்ப செலவாகும் பா...

இன்னும் அஞ்சு வருஷம் சர்வீஸ் எனக்கு.
அப்பறம் பென்சன் வரும். வேணும்னா
பிஎப் கிராஜுவிட்டி லோன் பண்ணிடறேன்.

அப்பா...

நீ படிடா கண்ணு. ஒரு கொழந்தைடா எங்களுக்கு... வேற யார் இருக்கா?

முடிச்சிட்டா கேம்பஸ் இன்டெர்வியூ ல வந்துடுவேன்.

நீ இஷ்டம் போல படி. அம்மாகிட்ட இதை டிஸ்கஸ் பண்ணாதே. புரியாது அவளுக்கு.

சார்...சார்...

அப்பா வாடகை கேட்டு வந்துருக்கார்..

நீ உள்ள போ நான் பேசிக்கறேன்.

******************

வெல்டன்...நீங்க பர்ஸ்ட் கிளாஸ்.டிஸ்டிங்க்ஷன். பிராவோ...

ரொம்ப தாஙக்ஸ் சார்.

அடுத்து ஆஸ்திரேலியா... கேள்விப்பட்டேன்.

ஆமாம் சார். ஆனா அந்த ஆசை எனக்கு இப்போ இல்லை.

வய் மேன்? ஆர் யூ சீரியஸ்?

சில அர்த்தமே இல்லாத காரணங்கள் பின்னாடி அளவில்லாத உண்மைகள் அனாதையா இருக்கும் சார். என் அம்மா அப்பாவை இங்கே விட்டுட்டு அங்கே போக மனசில்லை.

தென்? ஐ ஹோப் யூ மே டிசைடேடு..
வெரி வெல். காட் ப்லெஸ் யூ.

*************************************

ஏன்னா...

சொல்லுடி

அவன் இன்டெர்வியூ போறான் இன்னிக்கு. ஒரு ஐநூறு ரூபாய் கேக்கறான்.

பை ல இருக்கு. எடுத்துக்கோ.

.......

என்னடி? அழறையா?

இல்லை...போய்ட்டு போய்ட்டு வரான். ஒன்னும் கிடைச்ச பாடில்லே.

கிடைக்கும். பிள்ளையார்க்கு அர்ச்சனை பண்ணிட்டு வரேன்.

***************************

சார்...

இருங்க தம்பி...உங்களை மாதிரி எத்தினி
பேரு...

இல்ல...எக்ஸாம் பாஸ் பண்ணிட்டேன். இந்த இன்டெர்வியூ முடிஞ்சா ஜாப் கன்ஃபார்ம் ஆகிடும்.

உள்ளார பார்த்தியா...சூட்கேஸ் சூட்கேஸா கொடுத்துட்டு ஒக்காந்து இருக்கான். பாஸ் பண்ணிட்டேயே...ஊட்டுக்கு போ...தபால் வரும்.

பேனல் போர்டு ல எஸ்பெர்ட்ஸ் யார் சார்.
சும்மா ஓர் ஆர்வத்தில் கேட்கிறேன்.

தெரிஞ்சு...

அந்த நீல சொக்காய் பையனுக்கு போஸ்டிங் ஆவ போவுது. கூட ரெண்டு பசங்க இருக்காணுவ...சும்மா இல்ல
ஹெவி ரெக்கமெண்டு. பியூன் எனக்கு எப்படி தெரியும்னு பாக்குரியா..அதான் நான். பணத்தை மாத்தரதே எங்க மாதிரி ஆளுதான். போய் ப்ரைவேட்ல எதுனா கிடைச்சா ஜாயின் பண்ணிக்கோ.

சார்...
போய்யா..

***********************************

இந்த நிழலில் ஒக்காருங்க.

ஆமாம் சார். ரொம்ப சுடுது

சாப்டீங்களா

காலேல ஆச்சு

இன்டெர்வியூல என்ன சொன்னாங்க

வெரிபிகேஷன் முடிஞ்சு ரொம்ப ஆப்ரிசியெட் பண்ணினங்க.

அப்பறம்?

கால் பண்ணி சொல்லிடறோம் லெட்டர் வந்ததுக்கு பின்னாடி வாங்க னு சொல்லிட்டாங்க

அங்கே பாருங்க

எங்கே?

அதோ அந்த போர்ட் கார்ல...

அவர்தான் இன்டெர்வியூ செய்தாரா?

ஆமாம்...

அவர்கூட ஒரு மூணு பையன்கள்...

நீல சொக்காய்...

நீங்க யார் சார்...

உங்களை மாதிரி...

இந்த இன்டெர்வியூ அட்டெண்ட் செய்தீர்களா?

இல்ல. ஆனா இது மாதிரி நிறைய பண்ணிட்டு இந்த மாதிரி நீல சட்டைகள் வாங்கிட்டு போறதை வேடிக்கை பார்த்தவன்.

இது மாறாதா சார்?

மாறும்.

எப்போ எப்படி.?

இந்த பார்சல் பாருங்க.

ம்ம்

இதை இடுப்புல கட்டிட்டு உள்ளே போய் ஸ்விட்ச் தட்டினா நாளைக்கு உலகம் முழுக்க என்னை பத்தி பேசும்.

அப்படினா...இது...இது....

ஆம்.

நீங்க அப்போ....

நான் இப்போதான் அப்படி.

ஓ காட்...அப்போ நீங்க இப்போ போய்...

ஆம்

இது குற்றம். உள்ளே அப்பாவி ஜனம்.

யாரு அந்த பியூன் மாதிரியா?

ஆம். அவர்கள் பாவம்..

தம்பி உன்னால் மட்டும் அல்ல என்னாலும் ராணி எறும்பு ராஜா எறும்பை ஒன்னும் பண்ண முடியாது. ஆனா அதுக்கு விசுவாசமான இந்த வேலைக்கார எறும்புகளை என்ன வேணும்னாலும் செய்யலாம். செய்யணும். செய்யாம விட்டதுதான் தப்பு.

எத்தனை பெரிய கட்டிடம் எத்தனை நூறு மனிதர்கள்...பகவானே...பாவம்...

நேற்றும் இதே இடத்தில் இருந்தேன். இன்று நீ ஒருவன்தான். நேற்று மாலை வரை அனைத்து தகுதியும் கொண்ட ஏழு பேர்கள் இன்டெர்வியூ முடித்து அப்பாயின்மெண்ட் கடிதம் வருமென்று வீட்டுக்கு போய் விட்டனர். ஒரே வித்யாசம் நேற்று சிவப்பு சொக்காய்.


சரி தம்பி நீ கிளம்பு.

ஒரு நிமிடம்...

என்ன தம்பி

அதை என்னிடம் கொடுங்கள்.

தம்பி...

ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் இப்போது தேவை. நான் தேவையில்லை.

உங்கள் இடுப்பில் கூட சக்தி இல்லை. இது நிற்காது தம்பி சென்று விடு.

பரவாயில்லை. என் சர்டிபிகேட்ஸ் இருக்கே. வயிற்றில் பரப்பி வைத்து கொள்கிறேன்.

வேண்டாம் தம்பி. சென்று விடு.

கொடுங்கள்...இப்போது மணி 12.20 அதிக கூட்டம் இருக்கிறது. என்னை செல்ல விடுங்கள்.

தம்பி நினைவு இருக்கட்டும். நடு மையத்தில் நின்று சுவிட்ச் அழுத்த வேண்டும்.உன் புகழ் நிலைக்கும் வாஞ்சியை போல.

நன்றி நண்பர்.

***********************************

...........................டமார்..................................

எழுதியவர் : ஸ்பரிசன் (26-May-19, 12:57 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : damaar
பார்வை : 156

மேலே