தமிழ் என்றால்
தமிழ் என்றால்.
தமிழை உரைப்பதென்றால்
நா சிலிர்த்தெழும்
நரம்புகள் புடைத்தெழும்
உள்ளிருக்கும் உறுப்புகளெல்லாம்
பேருவகை கொள்ளும்
ஓடுகின்ற குருதியோ
கும்மாளத்தில் கொப்பளிக்கும்
விட்டு விட்டு துடிக்கும் இதயமோ
மெட்டெடுத்து தான் படிக்கும்
சிந்தை சீர்படும்
முடிவேயில்லாத முத்தமிழே..
செந்தமிழே .. என் செழுந்தமிழே ..
வணங்குகின்றேன் உன்னையே !
இவன்
மு. ஏழுமலை [9789913933 ]