தாழ் இட்ட அறை

தாழ் இட்ட அறையில்,
தலைவன் தனிமையில்...

படை சூள ராணி தயக்கத்தில்...
படி தாண்டி,பால் கொண்ட,தனி மயில்...
இவள் இளைப்பாற,
அவன் திகைப்பாற,
பிறப்பாறே புதிதாக....
முன் அணைப்பானே விளக்காக...
பின்னே அள்ளிப்பானே,தோகையாக...
கொஞ்சம் கிள்ளிப்பாளே,வெக்கத்தை...
சற்று தள்ளிப்பானே,தன் தவத்தை...
கன்னி கொண்ட பாலை கவ்வுவானே...
அவள் செவ்விதழில் மீதியை சேர்ப்பானே ...
இரு கைகளைக் கோர்ப்பானே ...
நெற்றித்தூள் நெலிந்து போக,
சுற்றிப் பூக்கள் ஏங்கி உயிர் விட...
கட்டில் கால் கடினப்படுமே ...
மெட்டிக் கால் தொட்டில் தொடுமே ...

எழுதியவர் : கதா (29-May-19, 12:47 pm)
சேர்த்தது : கதா
பார்வை : 5986

மேலே