காதல்

உன்னை தொட்டு ஓடும்
காற்று கூட
என்னை மட்டும்தான்
தொட வேண்டும்

உன்னில் வரும் சிறு
மாற்றம் கூட
என்னிலிருந்துதான்
தொடங்கவேண்டும்

உன் கால்கள் போகும்
பாதைகள் கூட
எனக்கு மட்டும்தான்
தடமாக வேண்டும்

அகிலா

எழுதியவர் : அகிலா (29-May-19, 12:46 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 401

மேலே