காதல்

எனக்கு எல்லாமாக
நீ இருக்கிறாய்

உனக்கு எதுவாக
நானிருக்கிறேன்

என் அத்தனை
ஆசைகளையும்
துறந்து விடுகிறேன்

உன் ஆசைகளை
எனக்கு மட்டும்
தந்து விடு

என் கதவுகள் அனைத்தும்
உனக்காக
திறந்திருக்கின்றன

உன் மனக்கதவை
எனக்காக மட்டும்
திறந்து வை

எனக்காக நான்
எதையும்
யோசிப்பதில்லை

உனக்காக நான்
என்னையும்
யோசிப்பதில்லை


அகிலா

எழுதியவர் : அகிலா (7-Jun-19, 6:17 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 360

மேலே