முகத்தில் முகம் பார்க்கலாம் - கல்யாணி ராகம்
தங்கப் பதுமை (1959 ஆம் ஆண்டில் வெளி வந்தது) என்ற திரைப்படத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி, எம்.எஸ், விஸ்வநாதன், இராமமூர்த்தி இசையமைப்பில் சிவாஜி கணேசன், டி.ஆர்.ராஜகுமாரிக்காக டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா 'கல்யாணி' ராகத்தில் பாடிய ஒரு அருமையான பாடல்.
சிவாஜி கணேசன் அலங்காரக் கட்டிலில் அமர்ந்து திண்டில் கைவைத்தபடி பாட, டி.ஆர்.ராஜகுமாரி அபிநயங்களுடன் பாடி ஆட ரசிக்ககூடிய இனிமையான காட்சி.(யுட்யூபிலும் காணலாம்)
முகத்தில் முகம் பார்க்கலாம் – விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால் ஆ...
மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என் முன்
வளைந்து இளந்தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம் - மானே உன்
முகத்தில் முகம் பார்க்கலாம் (டி.எம்.எஸ்)
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே அதன்
எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் (பி.லீலா)
இளமை பொங்கும் அங்கம் சிந்தும் - அழகில்
தங்கம் மங்கும் நிலையில் - நின்று
தன்னை மறந்து எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலெனச் சோலைதனில்
பொழுதெலாம் மகிழலாம்
கலையெலாம் பழகலாம் சதங்கையது
குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும் குறும்பு படர்ந்திடும்
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் (இருவரும்)

