அரசியல் வந்த பிறகு ஊரில்

ஆடு உண்டு மாடு உண்டு
அழகான கோழி உண்டு
அடுத்த அகத்தில் மேயும் போது
அதனை அவர்கள் அடித்ததுண்டு

ஆத்திரம் வந்து அவர்களோடு
அடிதடியில் இறங்கியது உண்டு
அதனால் ஊர் சபையில் நின்று
அபராதம் இருவரும் செலுத்தியது உண்டு

அடுத்து வந்த கோயில் விழாவில்
அனைத்தும் மறந்து பழகியதும் உண்டு
ஆண்டாண்டு காலந்தோறும்
இதுவே முறையான நிகழ்வாய் ஒன்று

ஆனால்

அரசியல் வந்த பிறகு ஊரில்
வெட்டும் பகையும் பலியும் உண்டு
சாதி மதம் பேதம் வந்து
மனித மனத்தை சிதைக்குது இன்று

ஆள நினைக்கும் கூட்டம் எல்லாம்
அனைத்தையும் கூறு போட்டு செழிக்க
அனைத்துத் தலைவரும் ஒன்றாய் அமர்ந்து
ஆலோசனை செய்து கூத்து அடிக்க

அப்பாவியாய் வாக்கிடும் தொண்டன்
அங்காளி பங்காளியோடு பகைப்பது ஏனோ?
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Jun-19, 8:39 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 65

மேலே