உன்னில் சிறந்த ஒருவரும்

தமிழனே தமிழனே தரணியில் சிறந்த தமிழனே
தன்னை ஏமாற்றும் கூட்டத்தை தரமறியாத் தமிழனே

உன்னில் சிறந்த ஒருவரும் உலகிலில்லை ஒத்துக் கொள்
சொல்லில் தமிழால் பேசுவோர் உள்ளக் கள்ளத்தை புரிந்துக்கொள்

தெள்ளுத் தமிழால் பேசியே மெல்லிய வலையை வீசுவர்
மீண்டு எழா முறையிலே நீண்ட கதையை புளுகுவர்

மீண்டும் மீண்டும் கேட்டு நீ வெகுண்டு கரத்தை முறுக்குவாய்
பேசிய ஒரு பொய்யனை தலைவனாய் நீ வணங்குவாய்

தாயைப் பிள்ளைத் தாரத்தை தவிக்க விட்டு அலை யுவாய்
தலைவன் என்ற பொய்யனோ சுற்றம் சூழ சுற்றுவான்

உன்னை உயர்த்த எந்நாளும் எண்ணத்தில் கூட நினைத்திடான்
சிதறி செய்யும் சின்ன செயலால் சிறப்பு வந்ததாய் பொய்யுவான்

அந்த தலைவனைக் கண்டு நீ காரி முகத்தில் உமிழ்ந்திடு
அடுத்தத் தலைமுறை அறிவாக வளர்க்க நீ பாடுபட்டிடு.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Jun-19, 8:21 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 65

மேலே