என்னவாயிற்று எழுத்துக்களுக்கு

என்னவாயிற்று எழுத்துக்களுக்கு ?

விரித்து வைத்த பத்திரிக்கை
எழுத்துக்களை காட்ட மறுத்தது
எழுதிய வரிகள்
ஒழுங்கு முறையின்றி
பதிந்தது !
வாசிக்க திறந்த புத்தகம்
வார்த்தை கலந்து
காட்டியது !

என்ன கோபம்
எழுத்துக்களுக்கு என் மீது ?

ஓங்கி அழைத்த குரலில்
ஓடி வந்த என் மகள்
மேசையின் மேல் இருந்த
மூக்கு கண்ணாடியை மாட்டி
விட்டு சென்றாள் !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (11-Jun-19, 10:38 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 954

மேலே