கட்டைவிரல்

1.
ஊர் எல்லையில் மக்களைக் காத்து
குலதெய்வமாய் வீற்றிருக்கிறாள்
கூரையற்று தீப்பாஞ்ச அம்மன்.
2.
துரோணர் இறுதி மூச்சு
நாசியைத் தொட்டு விலகுகிறது
ஏகலைவன் கட்டைவிரல்.
3.
மகள் திருமணத் தாலி
பூசையில் வைத்து வணங்கினாள்
குலதெய்வம் உத்தரவு கேட்டு...
4.
எல்லையம்மன் உக்கிர உருவம்
இளமையில் பார்த்து பயந்தது
இன்றவள் குலதெய்வ வழிகாட்டி.
5.
காத்து கருப்பு அண்டாமல் காக்க
கன்னிமார்களுக்கு மாவிளக்கு போட்டாள்
நோயால் குழந்தை பலி கொடுத்த தாய்.

ந க துறைவன்

எழுதியவர் : ந க துறைவன் (11-Jun-19, 11:07 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 59

மேலே