முத்து மாலை தேடும் பிள்ளைகள்

மாலையாகத் தான்
இருந்தது இதுவரை
உரசல் அதிகமாகி
அறுந்து விழுந்துவிட்டது ,
முத்துக்களும் கயிறும்
இரு கூறுகளாய் .
தர்க்க நியாய மொழியும்
ஆறுதல் ஒலிகளும்
குழந்தைக்குப் புரிதல் தரவில்லை
முகத்தில் மிரட்சிப் பார்வை
"முத்துமாலை காணவில்லை" -
குழந்தை தேடிக் கொண்டிருக்கிறது .