கற்ற வித்தை என்னமோ

சுத்தியலை வச்சு கத்துக்கிட்டேன் வித்தை
கற்ற வித்தை என்னமோ கல் உடைக்கும் தொழிலாம்

கால் வயிறை நிறைக்கும் கணக்கான ஊதியமே கிடைத்தது
கனவாய் வாழ்க்கை காலம் பூராவே கருக்கலில் சென்றது

கல்லில் பல வண்ணங்களை கண்டேன் உடைக்கும் போது
சொல்லால் மனிதர்கள் பலர் சுவைபட புளுகுவதைப் போல்

பல வகை வடிவில் பற்பல கற்களை வடிவிட்டேன்
பாசமில்லா மனிதருக்கு உதாரணமாகவே ஆயின அவை

தூணிற்கும் படிக்கும் தோட்ட காவலுக்கும் என கல் உண்டு
தூய மனிதர் எண்ணத்திற்கு தோதாயின எந்நாளும் அவை.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-Jun-19, 6:32 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 114

மேலே