பிழையான செயல்களையே
அரசாங்கம் அரசாங்கம் ஆட்சி செய்யும் அரசாங்கம்
அதிகார முறையாலே அடக்கியாளும் அரசாங்கம்
பிழையான செயல்களையே விதையாக்கும் அரசாங்கம்
பின்விளைவை எண்ணாமல் பெருமை பேசும் அரசாங்கம்
செழுமையான செல்வங்களை சிதறடிக்கும் அரசாங்கம்
அரிதான கனிமங்களை அயலாருக்கு விற்கும் அரசாங்கம்
அடிப்படைத் தேவைகளை படிப்படியாய் சிதைக்கும் அரசாங்கம்
படித்தவர்கள் மனதை பாமரராய் எண்ணும் அரசாங்கம்
அரசு ஊழியர்களை அரட்டி வேலை வாங்க துணியாத அரசாங்கம்
அவர்களின் ஊதியத்தைப் பார்த்து அங்கலாய்க்கும் அரசாங்கம்
அனைத்து துறையும் ஊழலில் உழன்றாலும் தீர்வு காணா அரசாங்கம்
--- நன்னாடன்.