இரவு

இரவு😎

சிற்றின்பத்தின் சொர்க்கம்
காமங்களின் கோட்டை
இருட்டுக்கு சொந்தகாரி
கருப்புதான் உன் நிறமோ
காதலர்களின் நித்திரை கெடுப்பாய்
இன்ப கனவுகள் பல கொடுப்பாய்.

தீயசக்திகளின் கூடாரம்
திருடர்களின் திரவுகோல்
மாந்திரீகத்திற்கு உகந்த நேரம்
மாய மோகினி வந்தாலும் வரும்
இதுவரை பார்க்காத பேய் நடந்தாலும் நடக்கும்

இரவின் மடியில் இனிதே ஆரம்பம்
மது,மாதுகளின் லீலைகள்.
மேடையில் வாய் கிழிய
தத்துவம் பேசும்
அத்துனை மகான்களும்
மதுவில் மூழ்கி, ஆடும் மாதுவின் முந்தானையை வக்ரமாக இழுக்கும் சம்பவம் அரங்கேறும் தருணம்.

ராத்திரி என்பதும் உன்
பெயர் தானோ
கவிஞர் கூறியது போல் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடுமோ
சாமியர்களே தடுமாறும் போதும் சாமானியன் எம்மாத்திரம் .

ஜோடிகளுக்கு இரவு வரப்பிரசாதம்
தம்பதியருக்கு இரவு மதனோற்சவம்
வயதோகிகளுக்கு இரவு பயம்
திருடர்களுக்கு இரவே பகல்.
இருட்டே மூலதனம்.
நோய்க்கு இரவு ஊற்று நண்பன்
பல மரணங்கள் கூட இரவிலே தான் நேரும்.

லட்சியவாதிகளுக்கு
இரவே போதி மரம்
சிந்தனை சிற்பிகளுக்கு
இரவே அமுதசுரபி
கவிஞனுக்கு
இரவே இன்ப உற்று
இசை அமைப்பாளருக்கு
இரவே வரம்

இரவும் அமைதியும்
நல்ல நண்பர்கள்
இரவும் தூக்கமும்
உலகம் போற்றும்
ஆதர்ச தம்பதிகள்
இரவும் பயமும்
பிரிக்க முடியாத தண்டவாளங்கள்
இரவும் இருட்டும்
உலகத்தின் முதல் உண்மை.

இரவு அபூர்வ இன்னொரு
இனிமையான உலகம்
எழில் நிலவு உலவுவது
இரவில் தானே
அந்த நட்சத்திர கூட்டம்
சிரிப்பதும் இரவில் தானே
பனி பொழிவதும் இரவில் தானே
இறைவன் படைத்த
ஜீவராசிகள் இனைவது இரவில் தானே
நீயும், நானும் பிறந்தோம்
இரவின் தயவில் தானே.
- பாலு.

எழுதியவர் : பாலு (11-Jun-19, 3:03 pm)
சேர்த்தது : balu
Tanglish : iravu
பார்வை : 82

மேலே