அவளும் நிலவும்
' வான வீதியில் வந்துலாவும் வெள்ளிநிலாவே
நீயறியாய் என்னவள் மண்ணில் நான் கண்ட
பெண்ணிலா மண்ணிலா , உன் முகத்திலேனும்
மாசு உண்டு , என் காதலி இவள் முகத்தில்
மாசென்பது ஏதுமில்லா பொன்முகம்' என்று
என்னவன் எனக்கெழுதிய காதல் மடல் இதோ
இன்னும் என்வசமுள்ளது ……..ஆனால் நிலவே
இன்று உன்னைப்பார்க்கும் நானோ வயதில்
மூத்தவளாய் முதுமை வாட்ட சுருங்கிய
நிலவுபோல் காட்சி தர …. நீயோ இளமைகுன்றா
அதே வெள்ளிநிலாவாய் நீல வானில் பவனி
வருகிறாய் …….. எனக்கு என்னவன் எழுதிய மடலும் அப்படியே இளமையாய் இருக்க என்னிடம் , நிலவே nee vaalga valarga இன்று போல் என்றும் வளர்மதியாய்