கருமையும் அழகு

கூவும் குயிலும் கண்ணதாசன் கவியும் கருமையின் அழகே
கார்மேக கண்ணனும் கரிகாலச்சோழனும் ,கருமையின் பெருமையே
எத்தனை வர்ணங்கள் இருப்பினும் வலிகளின் வர்ணம் நீயே
எத்தனை வார்த்தைகள் இருப்பினும் மௌனத்தின் நிசப்தம் நீயே
சொல்லமுடியா சோகமும் ,சொல்லில் அடங்கா கோவமும் அடக்கி ஆள்பவன் நீயே
விவசாயிகளின் வியர்வை நீயே , வாழ்வியளின் அர்த்தம் நீயே
பிரபஞ்சத்தை காட்டும் விழியும் நீயே , விண்ணில் தெரியும் இரவிலும் நீயே
மங்கை ரசிக்கும் மையிலும் நீயே , கீத்து கிழவி சிரிப்பிலும் நீயே
உணர்ச்சிகளின் பின்பம் நீயே , ஜடமாய் நிற்பவனின் உள் எரியும் தீயும் நீயே
வெளிச்சத்திற்கு அழகு சேர்பவன் நீயே , கள்ளம் இல்லா பால் பணம் நீயே
தனிமையை ரசிப்பவனின் தாய் மாடி நீயே , தாய் இல்லா பிள்ளை தாலாட்டும் நீயே
எண்ணில் அடங்கா காதல் நீயே , என்னில் மறைந்த கண்ணீர் நீயே
கருவறை உறவும் நீயே , கல்லறை துணையும் நீயே
எங்கும் எதிலும் உன்னை ரசித்தேன் அன்றுதான் உணர்தேன்
கருமையும் அழகே !!!

எழுதியவர் : ஹேமாவதி (10-Jun-19, 2:59 pm)
சேர்த்தது : hemavathi
பார்வை : 142

மேலே