கற்சிலை கற்சிலையல்ல தெய்வம்

இப்படித்தான் குழலூதும் கண்ணனின்
முகம் மோகன சிரிப்பில் இழைந்திருக்க வேண்டும்
என்று மனதில் பதிந்திருக்க வேண்டும்
உளிகொண்டு சிலை வடித்த சிற்பி
கண்ணன் கைகளில் ஏந்தும் குழல்
வேய்ங்குழல் அதன் ஓரத்தில் ஓர்
அழகிய பட்டு நூல் கொச்சு கல்லிலே
இதையும் வடித்த சிற்பியின் திறமை
என்னென்பேன் ; காமாட்சி அம்மன்
திருமுகத்தில் ஒரு தெய்வீக ஒளி
அவள் கண்களின் பார்வையில் தெய்வீகம்
கண் திறந்து ஆட்கொள்கிறாள் தேடி
வந்த பக்தன் மனதை ………….

கல்லில் எப்படி உரு ஏறியது இப்படி
அதுவே 'சாந்நித்தியம்'.... கல்லில்
வடிவம் அமைக்கும் ஸ்தபதி
உள்ளதால் அன்னை காமாட்சியை கண்டு கொள்ள
அவன் வேண்டியது உருவாகிறது
சிற்பத்தில் …… சாந்நித்தியம்

கோயில் சிலைகள் வெறும் கற்சிலை
அவனுக்கு அவன் மனதில் அந்த சிலை
அம்மன் என்றெண்ணாதவனுக்கு ….
அது உயிர்கொண்டெழும் ஆத்தாள்
நெக்குருக வேண்டி நிற்கும் அடியார்க்கு

பக்தியோடு அவன் நாமம் பாடி
மனதால் தரிசனம் நாட அந்த
வேண்டுதலுக்கு நிச்சயம் பதில் உண்டு
ஏனெனில் பக்தியால் கற்சிலை
நனைகிறது அதில் துயிலும் ஆண்டவன்
மாயத்துயில் துறந்து காட்சி தருவான்
நிச்சயம் ………. சாந்நித்தியம் சிலையில்

தண்ணீர் பஞ்சம் நீங்கி மழைபெய்ய
நாடுவோம் ஈசனின் கருணையை
கூட்டு பிரார்த்தனை செய்து
மன்றாடி கேட்டால் அவன் மனம் உருகும்
மழைபெய்யும்

வாருங்கள் கோயிலுக்கு வணங்குவோம்
இஷ்ட தெய்வங்களை வேண்டுவோம்
வேண்டி துதிப்போம் மலை வேண்டி
கல்லிலிருக்கும் தெய்வம் இதை
கேட்கும் மனதிளகும்
வேண்டும் மழைத்தரும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jun-19, 1:06 pm)
பார்வை : 130

மேலே