பூக்களின் அரசி

உருவத்தை வைத்து
யாரையும் எடை போடக்கூடா து,
பல சமயங்களில்
எளிதாக முடிவெடுத்து
ஏமாந்து போவதோடு
இன்னலுக்கும் ஆளாவதுண்டு

முருகப்பெருமானை
பால்மனம் மாறாத
பாலகனென எண்ணியதால்
சூரபத்மன் தன் இறுதி முடிவை
சந்தித்தான்

கூனியை எளியவளென
இராமன் நினைத்து
மண்ணுருண்டையால்—கூனியின்
முதுகில் அடித்ததால்
இராமன் பட்ட துயர்
இராமாயனத்தில் அறியலாம்

பெரிய தேராக இருந்தாலும்
சிறு கடையாணி ஒன்று
கழன்றால் தேரே விழுந்து
கடவுளும் விழ நேரும்
மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்

வாழ்வில் அற்பம் என்று
நாம் நினைப்பவை யாவும்
அற்பங்கள் அல்ல
சமுதாயத்தில் எல்லோரும்
சிறப்பானவர்களே

திருமகளும், கலைமகளும்
விரும்பி வசிக்கும் இல்லம் தாமரைப்பூ
அது சேற்றில் பிறந்தாலும்
அதன் மணத்தாலும், நிறத்தாலும்
பூக்களின் அரசியென போற்றப்படும்

எழுதியவர் : கோ. கணபதி. (23-Jun-19, 8:59 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : pookalin arasi
பார்வை : 44

மேலே