சிப்பிகளாய் சிதறுகிறாய் மீண்டும் மனவெளியில்

சிப்பிகளாய் சிதறுகிறாய் மீண்டும்  மனவெளியில்

கடல் மணல் வெளியில் சிதறிக் கிடந்த
கிளிஞ்சல்களை
சேர்த்தெடுத்து கடலலையிலே விட்டெறிந்தேன்
அலையில் மிதந்து வந்து கடல் மணலிலே சிதறியது !
கடந்த கால கடலலையில்
உன் நினைவுகளை விட்டெறிகிறேன்
நினைவலைகளில் வந்து சிப்பிகளாய் சிதறுகிறாய் மீண்டும் மனவெளியில் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-19, 10:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே