இரவு
இரவே...
இறைவன் கொடுத்த ஓவியமோ - நீ
உலகிற்கு கிடைத்த காவியமோ... வான்வெளியின் அற்புதத்தை வெளிக்காட்டும் வெள்ளி திரையோ நீ....
அனைவரையும் அரவணைக்கும் அன்னை மடியோ நீ.... வெண்ணிலாவை தேடும் அதன் காதலனுக்கு வழிகாட்ட வந்தாயோ... பால்நிலவை பறைசாற்ற பாரினில் அவதரித்தாயோ...