நூலகம்

நூலகம்.... முன்னுரை :- அறியாமை என்னும் இருளை அகற்றி இவ்வண்டத்திலுள்ள அற்புதங்களை எல்லாம் அறிந்திட உதவிடும் போராயுதமாம் நூலகம்.அத்தகைய நூலகத்தைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம். நூலகத்தின் வரலாறு :- மெசப்படோமியர்கள் முதன் முதலில் தாம் சொல்ல நினைப்பதற்காக எளிய குறியீடுகளை எழுத்து வடிவில் உருவாக்கி களிமண்ணில் எழுதி சேகரித்தனர்.நாளடைவில் அனைவரும் இம்முறையினையே கடைப்பிடிக்க துவங்கியதன் விளைவாலே "நூலகம்" உருவாக ஏதுவானது. நாகரீகத்தின் "அமேசான்" நூலகம் :- சுவாசக்காற்றின் சொர்க்கம் அமேசான் காடுகள்.அதனைப்போல நாகரீகத்தின் தொட்டிலாய் விளங்குவது நூலகம்.மனிதன் தோன்றிய காலம் முதல் இந்நாள்வரை மனித குலத்தின் மாண்புகளை எழுத்து வடிவில் பல்வேறு எழுத்தாளர்கள் வழங்கியுள்ளனர்.இதனை படிக்கும் தருவாயில் ஒவ்வொரு நாட்டிலுள்ள மனிதர்களின் வாழ்க்கை முறைகள்,அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் அந்நாட்டின் வள பெருமைகளை தெரிந்துக்கொள்ள ஏதுவாக அமைகிறது நூலகம். செய்த்தித்தாள் சேகரிப்பின் "இமயம்" நூலகம் :- பல நூறு ஆண்டுகளுக்கு முன் தகவல்களையும் உடனுக்குடன் பெற்றிட அண்மையில் உள்ள நூலகங்களை நாடினாலே போதும்.ஏனெனில் எல்லா வகை செய்தித்தாள்களையும் நுனி அளவும் குறையாமல் சேகரிக்கப்படும் இடமாக விளங்குவது நூலகமே. அறிஞர்களின் "சொர்க்கம்" நூலகம் :- தம் அறிவை அகன்றதாக மாற்றிட அறிஞர்கள் நாடுமிடமாக அமைவது நூலகமே.கடந்த 2018-ம் ஆண்டில் உலக மாமேதைகளின் தேர்வில் முதலிடம் பிடித்த இந்தியாவின் "சட்டமாமேதை" "டாக்டர் அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர்"அவர்கள் உலகின் மிகப்பெரிய நூலகமாக விளங்கும் இலண்டனில் 18 மணிநேரம் பயன்படுத்தியதனாலே இன்று உலகமே வியந்து பார்க்கும் சட்டத்தை நமக்கு வடிவமைத்து கொடுத்தார் என்றால் அது மிகையாகாது. முடிவுரை :- பாடப்புத்தகங்களோடு பல நல்ல நூல்களை சேகரித்து படிப்பதன் மூலம் நல்ல குடிமகன்களாகவும்,அறிவால் தளைத்து ஓங்கும் பெரும் வல்லுநர்களாகவும் உருவாகலாம்.ஊருக்கு ஒரு நூலகமும்,வீட்டுக்கு ஒரு நூலக அறையும் நிச்சயம் இருந்தால் "குழந்தையின் செல்வர்" அக்னி நாயகன் "டாக்டர்அப்துல்கலாம்" அவர்களின் இலட்சிய இலக்கான 2020 - ல் இந்தியா வல்லரசாக மாறும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை.... வசந்தகுமார் இரா

எழுதியவர் : வசந்தகுமார் இரா (1-Jul-19, 3:07 pm)
சேர்த்தது : விஸ்வமோனீஷ்
பார்வை : 3657

மேலே