தாதியரைப் போற்றுவோம்

தரணியெங்கும் சேவையாற்றும் /
தாதியரைப் போற்றுவோம்./
சுய நலம் இல்லாத சேவையாக
ஏற்று நடாத்தும் /
தாதியரைப் போற்றுவோம். /

சீருடையுடன் தான் இருந்து /
செதல் வடியும் புண் பட்ட
நோயாளியையும் /
முகம் சுழிக்காமல் பராமரிக்கும் /
தாதியரைப் போற்றுவோம் /

தன்னோடு எடுத்துச் செல்லும் /
உணவையும் உண்டு பசி தீர்க
நேரம் /
இன்றி நோயுற்று இருக்கும் /
நோயாளி மேல் அக்கறை கொண்டு/ பணியாற்றும் தாதியரைப் போற்றுவோம் /

மகப்பேறு காணும் முன்னே /
மகப்பேறு வைத்தியருக்கு சமமாக நின்று/ கண்ணும் கருத்துமாக கடமை புரிந்து /ஈருயிர் காக்கும் தாதியரைப் போற்றுவோம் /

இரவு பகல் பாராது திறந்த இமை மூடாது/ மனிதம் வளர்த்து இரக்கம் சுரக்க /
கடமையே கண்ணனெ பணி புரியும்/ தாதியரைப் போற்றுவோம் /

முதியோரிடம் பண்புடனும் மழலைகளிடம் அன்புடனும் /
பேசி நோய் உற்றோர் மனம் வலிக்காத வாறு/
உரையாடும் நல் உள்ளம் கொண்ட/ தாதியரைப் போற்றுவோம் /

ஐந்து விரலும் ஒன்று போல் இல்லை/ புனிதமான சேவையிலும் சுயநலவாதி உண்டு /
என்பதை நாம் நினைவுறுத்தி /
நல்லோரை வாய் மலந்து போற்றுவோம் /

மனம் வைத்து செய்வோருக்கு /
மருத்துவச் சேவை மகத்தான சேவை /
உயிர் காக்கும் சேவையிலே/
வேதம் நோக்காமல் மதம் பார்க்காமல் /
ஜாதி பிரிக்காமல் சேவையாற்றும் /

தாதியரை மனம் திறந்து /
என்றென்றும் போற்றுவோம் /
அவர்கள் பணி சிறக்க ஆயுள் நீடிக்க / இறைவனிடம் வரம் கேட்டு வாழ்த்துவோம்/ இதயம் திறந்து போற்றுவோம் /


(இது ஒரு தோழி தனக்காகக் கேட்டு சென்ற ஆண்டு எழுதிக் கொடுத்தவை இன்று நான் பதிவிட்டேன் 😊)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (7-Jul-19, 9:14 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 72

மேலே