இறைவனுக்கு நன்றிகள்
கண்ணைத் தந்து
இயற்கையின் வனப்பைக் காணவைத்தாய்
இறைவா , உனக்கு எப்படி நன்றி சொல்வேன்
தெரியவில்லையே - மனிதன் கண்களுக்கு
3 -D உருவம் தந்தாய் மற்றோர் உருவம் பார்க்க
மூளையெனும் அதிசய இயற்கை
கணினி பெட்டகம் தந்தாய் அதை
அழகாய் சொகுசாய் தலைக்குள் வைத்தாய்
இதை வைத்து என்னுள்ளத்தை கற்பனையில்
சிறகடித்து ஓடிஏ செய்து, கவிஞனாக்கினாய்
கணித மேதையாக்கினாய், விஞானியாக்கினாய்
இன்னும் இப்படி பல பல மேதைகளாக
வந்திட வழி வகுத்தாய் இறைவா
மார்புக்குள் இதயத்தை அமைத்தாய் அதில்
இயங்கி உயிர் தந்தாய் இறைவா
அதில் உன்னையும் ஞானியர்க்கு கண்டிட
வழியும் தந்தாய் இறைவா ……
இதயம் துடிக்க , நாடிகள் அத்தனையும் துடிக்க
துடிக்கும் வரை என்னுடலுக்குள் உயிராய்
இருக்கின்றாய் நீயே இறைவா
கால்கள் தந்தாய் நிற்க, நடக்க
யோகம் செய்ய , உன் பாதம் துதிக்க
சேவித்து , கைகள் தந்தாய் உன்னை
கைகூப்பி கும்பிட இறைவா
வயிறும் தந்தாய் பசியால் வாடிடும்போது
புசித்த உணவை ஜெரித்திட …..
இத்தனையேன், பஞ்ச பூதங்கள் படைத்து
அவற்றால் இயற்கை விநோதங்கள் படைத்து
அந்த பஞ்ச பூதத்தை அல்லவோ சரீரத்தின்
உள்ளேயும் புகுத்துவிட்டாய் … இறைவா
படைப்பின் அத்தனையிலும் நீயே நிற்கின்றாய்
இதைக் காணாதிர்ப்போரை என்னென்று சொல்வது