மழை

ஏகாந்தம்
விரவி குளிர்ந்து இருந்த
என் அறையின் ஏதோ ஒரு இரவில்...,
ஜன்னலின் பழுதுகள் வழி
மூர்க்கமாய் ஓர் ஆக்கிரமிப்பு
நடந்து கொண்டிருந்தது.....,
சொட்டும் இடைவெளிகளில்
உடைந்து கொண்டிருந்தது மௌனங்கள்.....,
என் கனவுகள் எங்கும் ஈரத்தின் நெடி
இடையிடையை வெளிவந்த என்
சுவாசங்கள் உறைந்து போயின.....!
என் போர்வைகளும் உருமாறி போயிருந்தன.....,
அந்த நொடி
ஈரத்திின் வன்மம்
சற்றே
எல்லைமீறி இருந்தது