தஞ்சையை ஆண்ட ராசராசனே

நீ என்ன கடுங்கொடூர அரசனோ
மக்களைக் கொடுமைப் பல செய்தாயோ
வலங்கை இடங்கை எனப் பிரித்தாயோ

காமக் கிழத்திகளை உருவாக்கினாயோ
கல்வெட்டுகளில் கற்பனையைப் புகுத்தினாயோ
சகோதரனை ஏவிக் கொன்றாயோ

ஏழையிடம் நிலம் பறித்தாயோ
ஏமாற்றி வரி வசூலித்தாயோ
எதிர்த்த மக்களின் கழுத்தறுத்தாயோ

ஆரியத்திற்குப் பயந்து அடிப்பணிந்தாயோ
ஆலயத்திற்குள் தமிழ் வெறுத்தாயோ
அடுத்தத் தலைமுறைக்கு வரலாற்றைத் திரித்தாயோ

சுந்தர சோழனுக்கு பிறந்த மூவரில்
ஆதித்த கரிகாலன், குந்தவை பிராட்டியின்
இளையனான அருண் மொழித்தேவனே

சிற்றப்பன் மாதுராந்தகச் சோழனுக்குப் பின்னே
சிம்மாசனம் ஏறி இளையவன் நீ முடி சூடியது எப்படி
சீக்கிரம் விடைச் சொல்ல ஒரு பிறப்பை எடு.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Jul-19, 6:38 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 86

மேலே