அரசே விற்கட்டும்
குடிக்கட்டும் குடிக்கட்டும் குடிமக்கள் யாவரும்
குடிக்க குடிக்க குற்றங்கள் பெருகட்டும்
பெற்றவர் மனமெல்லாம் பெருஞ்சோகம் பெருகட்டும்
பிள்ளைகளும் பெருஞ்சொத்தும் பஞ்சாய் பறக்கட்டும்
நஞ்சென்று தெரிந்தே நம் அரசு விற்கட்டும்
நவ துவாரங்கள் வெந்து நன் மரணம் நிகழட்டும்
கட்டுப்படாத குற்றங்களுக்குக் காரணக் குடியை
காவலர் புடைசூழ அரசு கணக்கில்லாமல் விற்கட்டும்
மக்கள் தொகையைக்குறைக்க மருந்தில்லா நிலையில்
மலட்டுத்தன்மைக் காரணி மதுவின் வீரியம் பெருகட்டும்
குடிக்க பணமின்றி வழிப்பறியும் கொலையும் செழிக்கட்டும்
குதுகலமடைந்த குடும்பம் குற்றப் பரம்பரையாய் மாறட்டும்.
---- நன்னாடன்.
 
                    

 
                             
                            