லிமரைக்கூ

தள்ளாடும் குடிகாரன் கால்கள்/
வறுமையின் பிடியில் அவன் குடும்பம்/
பசியில் மனைவி மக்கள்/


மழையில் நிறைம்பியது ஆறு/
சந்தோசமாக ஓடி நீந்தியது மீன்/
உள்ளே மறைந்தது சேறு/


ஓயாமல் ஆடுது அலை/
உதவி இன்றி படகில் மீனவன்/
கடலோடு ஆடுது வலை/


மேகத்தின் அழுகையோ மோகம்/
பூமியிலே நிறைந்து விட்டது வெள்ளம்/
என்னுள்ளே ஒரு சோகம்/


இருவருக்காக போட்ட கட்டில்/
கணவன் தொட்டான் மனைவி விட்டாள்/
இதோ வந்தது தொட்டில்/


வீதிக்கு வீதி கடை/
வரிசை கட்டி வாலிபர் கூட்டம்/
நாளை மது தடை/


தாய் தந்தை ஆசான்/
மூன்று தெய்வங்கள் சொல் கேட்டால்/
நாம் அறிவில் மகான்/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (8-Jul-19, 9:05 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : limaraikkoo
பார்வை : 154

மேலே