தூரல்
அந்த நேரம்
மர்மமாய் மாறிக்கொண்டிருந்தது
கவிழ்க்கப்பட்ட
குட்டைகளில்
முகங்கள் புதைக்கப்பட்டுக்
கொண்டிருந்தன.......,
முண்டியடித்து
கிடைத்த இடங்களெங்கும்
காற்றும் கூட
துரத்தப்பட்டது......,
ஆங்காங்கே மரத்தில்
பூக்கள்
தற்கொலை
செய்து கொண்டிருந்தன.....,
வெளிகளெங்கும்
மர்மம் கூடிக்கொண்டிருந்தது.....,
அந்தநேரத்தில்
என் ஜன்னல் கண்ணாடிகளை
சில தூரல்கள் உடைத்துக் கொண்டிருந்தன
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
