ஜன்னலோரம்
கடிகாரத்தின்
முட்கள் என் காலத்தின் நகர்வுகளை
முறித்துக்கொண்டிருந்தது......,
என் அறையின்
ஒரு விளிம்பில்.....,
ஒரு ஜன்னல்
அது எனக்கான சுவாசங்களை
பிரசவித்துக்கொண்டிருந்தது.....,
எனக்கான
நிழலும்,
ஒளியும்
மழையும்
அதனிடமிருந்தே.....,
என்னின் வன்மங்கள்
ஒரு போதும் அதை காயம் செய்ததில்லை ....,
உடையாத கண்ணாடிகளின் மேல் மழைத்துளிகள் ......,
என் நிம்மதி இழந்த இரவுகளின் வலி....,
அதற்கு மட்டுமே தெரியும்!
என் ஜன்னலை
நான் எப்போதும் திறந்தே வைக்கிறான்......,
அது எனக்காக சில மழைகளை
பரிசளிக்கிறது.....,