ஐந்து புரவலர்கள் -2 துகிருஷ்ணமூர்த்தி

மழை
வனமெனும் தந்தையும் வானெனும் தாயும்
ஈன்றெடுத்த தவப்புதல்வன்.

நெருப்பு
ஞாயிறே நாயகன் அண்ட முழுமைக்கும்
பூமியின் உயிர்ப்பொறி

நிலம்
பிறந்தாலும், சிறந்தாலும், இறந்தாலும்,
நம்மை தழுவும் நாயகி

காற்று
அன்னையாய் மனைவியாய் தோழியாய் காதலியாய்
தென்றலாய் கொண்டலாய், மேலையாய் வாடையாகும்

வானம்
நீல வண்ணமாய் விழி காண வெட்ட வெளி
வெறும் ஆகாயம் நட்ட நடுவில்.

ஐந்தும் அமையாது அண்டமில்லை, அறிந்தும்
இவைகளை கொன்றொ ழிப்பதேன்?

புரிந்தும் புரியாதாய் கண்டதென்ன? தெரிந்தும்
ஆறறிவாய் வாழ்ந்தென்ன காண்?

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி து (9-Jul-19, 10:06 pm)
பார்வை : 89

மேலே