தோனி ராஞ்சியின் ராஜாவான கதை - 2

2003ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டம். சச்சின் அவுட் ஆனதும் டிவிஐ ஆப் செஞ்சிட்டு மழை வருமான்னு வேண்டிக்கிட்டு இருந்தோம். தோற்ற மறுநாள் பாண்டிங் ஸ்ப்ரிங் பேட் வச்சி அடிச்சான். அதுனால மறுபடி மேட்ச் நடக்கும்னு சமாதானம் சொல்லிக்கிட்டு இருந்தேன். இதை ஏன் இப்போ சொல்லறேன்னா, சச்சின், சேவாக் மற்றும் கங்குலி 3 பேருல ஒருத்தன் அவுட் ஆனாலும், ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை யாருக்கும் இருக்காது. எனக்கு விவரம் தெரிஞ்சி, நான் பார்த்த முதல் சேசிங்னா இங்கிலாந்துக்கு எதிரா நாட்வெஸ்ட் தொடர் இறுதி ஆட்டத்துல யுவராஜ் - கைப் சேர்ந்து அடிச்ச மேட்ச்தான். அது எதிர்பாராத வெற்றி.

மீண்டும் மூன்றாவது அத்தியாயத்துக்கு வருவோம். பாகிஸ்தான் தொடருக்காக இந்தியா அணி பாகிஸ்தானுக்கு போகுது. கிடைக்கிற வாய்ப்பு எல்லாத்துலயும் தோனி சிறப்பா விளையாடிட்டு வரான். கடைசி கட்டத்துல 100 பந்துக்கு 80 ரன்னே சிரமமான விஷயம். தோனி வருகைக்கு அப்புறம் எல்லாம் மாறுது. strike rateலாம் 100 தாண்டுறது, பெரிய விஷயம். நல்லா ஞாபகம் இருக்கு. கூலி தொழிலார்கள் மத்தியில் மேட்ச் பாக்குறேன். பல வருடமா தோத்துருவோம்னு சொன்ன வாய் எல்லாம் தோனி வருகைக்கு அப்புறம், அதான் தோனி இருக்கான்ல அடித்திடுவானு சொல்லுது. அங்க இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் v2.0 தொடங்குது. அந்த நம்பிக்கைக்கு விதை போட்டது தோனி.

அந்த தொடர்ல தொடர் நாயகன் விருது வாங்குனது என்னமோ யுவராஜ் தான். மனுசன் செம பார்ம்ல இருந்தான். ஆனா, தோனி தனியா தெரிஞ்சான். அவன் ஒரு மேட்ச்ல 46 பந்துக்கு அடிச்ச 72 ரன்லாம் எந்த இந்திய ரசிகனும் நெனைச்சு பார்க்க முடியாதது. சாதாரண செங்கல்லா இருப்பான்னு நெனச்சா, அடேய் நான் அதுக்கும் மேல வைரக்கல்ன்னு சொல்லாம சொல்லி வந்தான். முத்தாய்ப்பாய் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷரப், தோனிய புகழ்ந்ததுலாம் இப்போ இருக்குற 20k கிட்ஸ்க்கு தெரிய வாய்ப்பில்லை. அது முதலே தோனி-யுவராஜ் நின்னா மேட்ச்லாம் ஜெய்ச்சிடுவோம்ன்னு கெத்தா சொல்லிட்டு திரிவோம். அங்க இருந்து ஒரு உலகத்தரமான finishers உருவாகிட்டு வரானுங்க.

எல்லாமே சிறப்பா போனா கதையில சுவாரசியம் இருக்காதே. 2007ம் ஆண்டு உலகக்கோப்பை வந்தது. சச்சின், கங்குலி, சேவாக், டிராவிட், யுவராஜ், தோனின்னு இருந்த பேட்டிங் லைன்-அப் பார்த்து கப்பு நமக்குதானு சொல்லிட்டு இருந்தேன். செத்த பாம்புன்னு சொல்லி நெனச்சிட்டு இருந்த வங்கதேசம், நம்மள வச்சி செஞ்சிட்டாங்க. புழுவா நெனச்ச வங்கதேச அணி நாகினி ஆட்டம் ஆடுற அளவுக்கு வளர்ந்ததுக்கான தொடக்கம் அது. அந்த தொடர் தோனிக்கு ஒரு மோசமான தொடர். ரெண்டு மேட்ச்ல டக்-அவுட். ஜெயிச்சா கடவுள் அளவுக்கு பார்க்கப்படுற எல்லோர் வீடுகளும் தோற்றால் கல்லடி படுவது சகஜம் தான். அது அப்பவும் நடந்தது.

அப்போதான் T-20 கிரிக்கெட் போட்டி அறிமுகமாகுது. வழக்கம் போல மூத்த வீரர்களுக்கு ஓய்வு தரப்படுது. யார் அடுத்த கேப்டன்? சத்தியமா நான் தோனி வருவான்னு நெனச்சி கூட பார்க்கல. அப்போ என்னோட யூகம் சேவாக் அல்லது யுவராஜ் மட்டும்தான். யுவராஜ் கூட கேப்டன் பொறுப்பு கிடைச்சா சிறப்பா பயன்படுத்திக்குவேன்னு சொன்னதா ஞாபகம். ஆனா, சச்சினோட பரிந்துரையின்படி தோனிக்கு வருது. ஆனா, அப்போ இருந்த மன நிலையில தோனியை கேப்டனா ஏத்துக்க மனம் இல்லை. என்ன பொறுத்த வரைக்கும் அவன் ஒரு காட்டன் தான். கண்ணை மூடிட்டு சிக்ஸ் அடிக்கிற காட்டன்.

முதல் மேட்ச் பாகிஸ்தான் கூட. ஆரம்பமே, அவனுக்கு அக்னி பரிச்சைதான். கேப்டன் ஆனதும் அவனோட பொறுப்புணர்ச்சி முதல் ஆட்டத்துலயே வெளிப்படுது. 31 பந்துக்கு 33 ரன்லாம், அவன் ஒருநாள் போட்டி ஆட்டமுறைக்கே ஈடாகாது. வெளிப்படையா சொல்லணும்ன்னா அது ஒரு ஸ்லோ இன்னிங்ஸ். அவனுங்களுக்கும் ஒரு எட்ட கூடிய இலக்குதான். மேட்ச் எப்படியோ டை ஆச்சு. பௌல்-அவுட் முதல் முறையா அறிமுகப்படுத்த படுது.

அந்த இடத்துல எவன் கேப்டனா இருந்தாலும் முன்னணி பௌலர்ட்ட தான் பந்தை கொடுத்துருப்பாங்க. தோனி அதுல விதிவிலக்கு ஆச்சே. பாகிஸ்தான் கேப்டன் முன்னணி பௌலர்கள்ட்ட பந்தை கொடுத்தப்ப, தோனியோ சேவாக், ஹர்பஜன், உத்தப்பாட்ட பந்தை கொடுத்தப்பவே இவன் சாதாரண கேப்டன் இல்லை. ஒரு சரித்திரம் படைப்பான் அப்படினு தோணுச்சு. ஒவ்வொரு முறை சேவாக், ஹர்பஜன், உத்தப்பா விக்கெட்டை அடிக்கும்போதும், எனக்கு T-20 மட்டும் பத்தாது ஒருநாள் போட்டி, அடுத்து டெஸ்ட் போட்டின்னு தோனி அவனுக்குள்ளயே அவனுக்கான அரசாங்கத்தை கட்டமைச்சிட்டு இருந்துருப்பான்.


வெறும் பத்து பேருக்கு கேப்டனா இருந்த ஒரு சாதாரண டிக்கெட் கலெக்டர், கேப்டனுக்குலாம் கேப்டன் ஆனதுக்கான வரலாறு தென்ஆப்ரிக்காவுல எழுதப்படுது. (நாளைக்கு எழுதுவோம்)

எழுதியவர் : Sherish பிரபு (12-Jul-19, 8:00 pm)
சேர்த்தது : Sherish பிரபு
பார்வை : 84

மேலே