சேதி சொல்லுதாம் வாழ்க்க...?

மின்னல் வெட்டு - பிறகு
மின் வெட்டு ,
இறந்து போனது
மின்விசிறி மட்டும் அல்ல.

ஆகாயக்கடல் ,
மின்னல் துடுப்பு ,
நீந்திச்செல்லுது
என் அறை .

கைபேசி வெளிச்சம்
கை விரல்களின் நிழல்
பிரம்மாண்டமாய் தோன்றுது பிம்பம்.

அரைத்தூக்கத்தில் வானமும்
பாதி வெளிச்சத்தில் நானும்
கண்கள் கொண்டே விடிந்தது உடல்.

மனிதன் விடும் மூச்சினில் - இன்று
மரங்கள் விடுகின்றன மூச்சினை.
காலம் மாறிவிட்டதாமே..?

வாழைமரத்தின் நிழல்
தீமை நடப்பதற்க்கான
அறிகுறியாம் ..?

பாவம்!!

மூன்றாம் தளத்தில்
வசிக்கும் என் அறையில்
என் நிழல் மட்டுமே உண்டு.
வாழை மரம் பிழைத்து விட்டது.

எழுதியவர் : vivek prasanna (7-Sep-11, 1:46 pm)
சேர்த்தது : vikki prasanna
பார்வை : 249

மேலே