கூட வா நிழலே ..
கூட வந்த நிழலே ..
கூட வந்த நிழலே ..
கூடலையே நாம இன்னும் ..
வெளிச்சம் வர கூட வந்து வெக்கையில நடக்க விட்ட ...
காட்டிருட்டு கண்டதும் எங்க போய் நீ ஒளிஞ்ச..
கண்மூடி நான் கிடக்க கனவுலையும் நீ இல்ல ..
பாரமுன்னு நீ நெனைச்சா ராத்திரியில பதுங்கிகிட்ட ...
கலரு சட்ட போட்ட நானும் கறுப்பாத்தான் இருக்கேன் ..
உடம்பே மீசையாகி நீண்டுகிட்டே போறேன் ...
களவாணி பயபுள்ள கண்மூடி கெடக்குற..
காதலி இல்லைன்னா நிலத்துல விழுகுற ..
என் உசுரே கறுப்பாகி ஜோடி போட்டு வருது..
12 மணி ஆனதும் பாதத்த நக்குது..
கூட வா நிழலே ..
கூட வா ...
கூத்தடிக்க கூட வா.