நிர்வாண சட்டை …
ஆடையணிந்தும் நிர்வாணமாய்
என் வீட்டுப்பனித்துளி.
வசிக்க இடம் தேடிய
நாளிலெல்லாம் மறந்தே போனேன் - நான்
எப்போதோ வசித்த இவ்வீட்டினை.
ஒரு முறை கூட - இப்படி
வாழ இயலவில்லை என்னால்.
சுவர்கள் இல்லை ,
உணவு இல்லை ,
கழிவறை இல்லை .
சிறிது நேரம் வசித்த பின்
நானும் நிறைந்து நிர்வாணமானேன்.
உட்சென்று உயிர் தீண்டி
நனைந்து விட்டது - என்
நாணமும் ஞானமும்.
பிஞ்சுக்குழந்தையின்
கருப்பை போன்று அத்தனை
தூய்மை அப்பனித்துளி.
சாயம் போகாத சலவை செய்யாத
சரும பயிர் வெளி.
நாம் முகம் பார்க்கலாம்.
சிரிக்கலாம் ,
ஒரு முறை வசித்துவிட்டு திரும்பலாம்.
உட்சென்றபடி சூரியனை முத்தமிடலாம்.
இனி -
ஆடையணிந்தும் நிர்வாணமாய் - நானும்
என் வீட்டுப்பனித்துளியும்