நிலா காயும் இரவினிலே - 5

பாகம் - 5 :

ஏஞ்சலோடு தோழிகளும் ஆனந்த சிரிப்பினில் தங்கள் உள்ளத்தின் உணர்வுகளைப் பங்கு வைத்துப் பரிமாறிக் கொண்டிருக்க, தன் வருங்கால அத்தை மாமாவோடு பேசிவிட்டு போயிட்டு வர்றேன் என்று சொல்லி புறப்படுகிறான் புது மாப்பிளை அரவிந்தன். என்ன ஒரே சிரிப்புச் சத்தமாக இருக்கு என்று கேட்டுக் கொண்டே வர, நாங்க ஒண்ணு சேர்ந்தாலே அந்த இடம் சந்தோசமா மாறிடும் என்று மகிழினி சொன்னாள். நாங்க நிச்சயத்துக்கு வரல, வந்திருந்தா அந்த இடமே ஒரு திருவிழா மாதிரி இருந்திருக்கும் என்றாள் ஏஞ்சல்.

சரி போயிட்டு வர்றேன் காயூ... ஒரு காதலோடு சொல்லிக் கிளம்பும் போதே குறுக்கிட்டாள் ஏஞ்சல். ஏன் எங்களைப் பார்த்தா மனுசங்க மாதிரி தெரியலையா, காயத்திரிக்கிட்ட மட்டும் சொல்லிட்டுப் போறீங்க என்றதுமே அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். அரவிந்தனும் காயத்திரியும் ஓரிரு நொடிகள் வெட்கத்தில் முகம் சிவந்தனர். ஏய்.. பாருங்க... பாருங்க... ரெண்டு பேருக்கும் எப்படி முகம் செவக்குதுனு என்று மலர்விழி சொல்ல, சும்மா இருங்கடி என்று காயத்திரி நாணத்தோடே சொன்னாள். இவன் ஆளவிட்டா போதும் என்று அந்த இடத்தை விட்டுத் தன் இருசக்கர வாகனத்தை இயக்கி உதட்டில் புன்னகையோடு புறப்பட்டான்.

சரி வாங்க மேல போய் பேசிட்டு இருக்கலாம் என்று ஏஞ்சலைத் தங்கும் அறைக்கு அழைத்தாள் காயத்திரி. ஆமா நீங்கலாம் எப்ப வந்தீங்க என்று மற்றத் தோழிகளைப் பார்த்து ஏஞ்சல் கேட்க, இன்னைக்கு காலையில தான் வந்தோம் என்று மலர்விழி பதில் சொன்னாள். எல்லாம் ஒன்னாவா வந்தீங்க, இல்ல தனித்தனியா வந்து ஒன்னா சேர்ந்துகிட்டோம் என்று நீலவேணி சொன்னாள். நான் வர்றதுக்கு முன்னடி எல்லாம் தின்னுட்டு இருந்தீங்க போல, மெத்தையில பாத்திரம்
அப்படியே கெடக்கு என்று ஏஞ்சல் கேட்டாள். அத்தை பலகாரம் கொடுத்து விட்டாங்கடி, அம்மா கூப்புட்டதும் அப்படியே போட்டுட்டு வந்துட்டோன்டி என்றாள் காயத்திரி.

என்னடா கொடுத்திட்டியா என்றாள் அம்மா கல்யாணி. ஆம் கொடுத்திட்டேன்மா என்று சொல்லி வேக வேகமாக ஏறினான் அரவிந்தன். அதற்கேற்ப நண்பர்களும் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
இங்க பாருடா நல்லவன் வர்றான் என்றான் தேவா. வாடா நல்லவனே திரும்பவும் எங்கள ஏமாத்திட்டல என்று கேசவன் சொல்ல, இல்லடா பலகாரந்தான் கொடுக்கப் போனேன் என்றான் அரவிந்தன். நடிக்காதடா... என்றான் மணி. உங்கள கூப்புட்டுப் போகத்தான்டா வந்தேன். சரி வா போவோம் என்றான் தேவா. அப்பறம் போவேம்னு சொல்லாதே, இப்பவே மணி ஆறாச்சுடா என்றான் கேசவன். அவளவு அவசமடா என்று அரவிந்தன் கேட்டான். டேய்.. நாங்கெல்லாம் கல்யாணத்துக்கு என்று தேவா சொல்ல வரும்போதே, நிறுத்து... நான் இப்பவே அழைச்சிட்டுப் போறேன் என்றான் அரவிந்தன்.

அந்த வீட்டை நோக்கி இவர்கள் நடக்கத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்து கொண்டே பத்து நிமிடத்தில்
அந்த வீட்டை அடைந்தனர். வீட்டுக்குள் நுழைந்ததும் வாங்கப்பா என்ற குரல்கள் கேட்டது, இதான் காயத்திரி அம்மா, அப்பா என்று நண்பர்களுக்கு அறிமுகப் படுத்திவிட்டு இவர்களையும் அவர்களுக்கு அறிமுகப் படுத்தினான் அரவிந்தன். கொஞ்ச நேரம் அவர்களோடு உட்கார்ந்து ஒவ்வொருத்தர பத்தியும் விசாரிச்சுச் சிரித்துப் பேசி உரையாடி கொண்டிருந்தார்கள். சரிப்பா உங்கள பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி, மேலே போய் பாத்துப் பேசிட்டு வாங்க என்று ரவிசங்கர் சொல்லி எழுந்து உள்ளே போனார்.

அரவிந்தனும் நண்பர்களும் படியேறி மேலே சென்றால், அங்கு அவர்களைக் காணவில்லை. எங்கடா யாரையும் காணோம் என்று ஆச்சர்யத்தோடு மணி கேட்க, ரொம்ப அவசரப் படாதே... அதான் வந்துட்டோம்ல பாக்கலாம் என்றான் கேசவன். மொட்டை மாடியில் வாங்கடா பாக்கலாம் என்று அழைத்துச் சென்றான் அரவிந்தன். குளிர் நிலவு ஒளி வீச, தளிர் மலரோ?... மணம் வீச, பட்டாம் பூச்சிகளின் வர்ண கோலத்தில், பருவ மங்கைகள் புன்னகையோடு பேசிக் கொண்டு நின்றனர். என்னடி உன் ஆளு ஒரு கும்பலையே அழைச்சிட்டு வர்ற தோரணையே சரியில்ல என்றாள் மகிழினி. என்னதான் நடக்குதுனு பாப்போமே என்று சொல்லி சிரித்தாள் ஏஞ்சல்.

என்ன எங்களப் பாத்ததும் குசுகுசுனு பேசிட்டு இருந்த மாதிரி இருந்தது, கிட்ட நெருங்கி வந்ததும் அமைதியா நிக்கிறீங்க என்றான் கேசவன். அப்படி உங்க மனசுல நெனச்சுக் கிட்டா நாங்க பொறுப்பாக முடியுமா என்றாள் ஏஞ்சல். நான் அப்பவே சொன்னேன்ல நம்மல பாத்தாலே பொண்ணுங்க எல்லாம் பொய் சொல்வாங்கனு அதான் இது என்றான் கேசவன். அய்யோ... கண்டுபிடிச்சிட்டாரு புத்திசாலி என்று கிண்டலாய் ஏஞ்சல் பதில் சொல்ல தோழிகள் சிரித்தனர். பாத்தீங்களடா பொண்ணுங்களுக்குள்ள ஒற்றுமையை, நீங்களுந்தான் இருக்கீங்களே என்று சொல்லி முடித்தான் கேசவன்.

சரி சரி அதெல்லாம் விடுங்க என்று இவர்களை காயத்திரிக்கும் அவள் தோழிகளுக்கும் அறிமுகப் படுத்தும் முன், முந்திக் கொண்டான் மணி. வணக்கம்.. வணக்கம்.. வணக்கம்.. நான் மணி, இது தேவா, அவன் கேசவன் அப்பறம் இவன் தான் அரவிந்தன் என்று சொல்லி முடித்தான். அரவிந்தன தான் எங்களுக்கு முன்னடியே தெரியுமே என்றாள் நீலவேணி. அப்படியா... டேய் அரவிந்தா ஒன்ன தெரியுமான்டா, நீ போயிட்டு அப்பறம் வாடா என்றான் மணி. டேய் ஒன்ன... என்று அரவிந்தன் இழுக்க, சும்மாடா என்று சிரித்தான் மணி. அப்பறம் என்ன காயத்திரி தங்கச்சி... உங்க தோழிகள அறிமுகப் படுத்தி வைக்க வேண்டியது தானே என்றான் தேவா. சரி சரி என்று ஒவ்வொருத்தராய் அறிமுகம் செய்து வைத்தாள் காயத்திரி.

இதுல யாரும் காதலுல விழுந்துட்டீங்களா என்ன என்று கேசவன் கேட்க, என்ன கொழுப்பா... ஏன் அப்படி கேட்குற என்று சற்றுக் கோபத்தோடு அமுதாவும் மலர்விழியும் கேட்டனர். சேர்ந்து காதலுல விழலாம்னு தான் என்று மெல்லிய குரலில் கேசவன் சொன்னான். என்னது... என்று மகிழினி கேட்க, சும்மா தெரிஞ்சுக்கலாமே அப்படினு தான் என்றான் கேசவன். அரவிந்தன் இவங்கள ஏன் இங்க கூட்டிட்டு வந்தீங்க என்று நீலவேணி கேட்டாள். அவன் எங்க கூட்டிட்டு வந்தான், அடம்பிடிச்சுல கூட்டிட்டு வர வச்சோம் என்று மெதுவா சொன்னான் மணி. என்னது... மணியைப் பார்த்துக் கேட்டாள் நீலவேணி. அவன் எங்க கூட்டிட்டு வந்தான், எங்கள பிடிச்சு இழுத்துட்டுல வந்தான் என்றதும் அனைவரின் உதடுகளிளும் புன்னகை ததும்பியது.

டேய் என்னங்கடா... என்ன பலியாடா மாத்துறீங்க என்றான் அரவிந்தன். அதான் பாத்தாலே தெரியுதே, எதுக்கும் பாத்து அரவிந்தா பலி கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க என்று சொல்லி சிரித்தாள் ஏஞ்சல். ஆமாம் உங்க இன்னொரு நண்பர் கல்யாணத்துக்கு வல்லையா என்று காயத்திரி கேட்டாள். யாரு முகிலா?... வந்துகிட்டு இருக்கான், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான் என்றான் அரவிந்தன். இவங்க பத்தாதுனு இன்னொருத்தர் வேறேயா?... என்றாள் மகிழினி.

ஏங்க எப்ப பாத்தாலும் பசங்க மேலே கோவப்படுறீங்க என்றான் கேசவன். எல்லாம்... நீங்க நடந்துகிறதுல இருக்கு என்றாள் ஏஞ்சல். அப்படி என்ன... நாங்க தப்பா நடந்துகிட்டோம் என்று தேவா முடிப்பதற்குள் ம்... என்று ஒரு அழுத்தமான குரலில் ஏஞ்சல் இழுத்தாள். கேசவன் தொடர்ந்தான் ஏதோ?... கொஞ்சம் வாய் அதிகந்தான், கொஞ்சந்தானா?... என்று மீண்டும் கிண்டலாக கேட்டாள் ஏஞ்சல். சரி அதிகமாக இருக்குனே வச்சிக்கிருங்க, மத்தப்படி நாங்கெல்லாம் ரொம்ப நல்ல பசங்க என்றான் கேசவன். அதான் பாத்தாலே தெரியுதே என்று சிரித்துக் கொண்டே மலர்விழி சொன்னாள்.

இப்படியே கேலி கிண்டலோடு இந்தப் பக்கம் இவர்கள் பேசிக் கொண்டிருக்க, காயத்திரியும் அரவிந்தனும் அந்தப் பக்கம் கொஞ்சலோடு பேசிக் கொண்டிருந்தனர். நாமெல்லாம் இங்க பேசிட்டு இருக்க, அங்க பாத்தீங்களா காதல என்று தேவா சொன்னதும் அனைவரும் அவர்களைக் கிண்டல் செய்யத் தொடங்கினர். அடியே கள்ளி... என்று ஏஞ்சல் சொல்ல, இப்பதான் பையன் ஏன் அடிக்கடி இங்க வர்றானு புரியுது என்று தேவா சொன்னான். அந்தக் குளிர் நிலாவின் ஒளியில் சிரிப்புகளோடும் பொய்க் கோவங்களோடும் உரையாடல் தொடர்கிறது...


தொடரும்...

எழுதியவர் : இதயம் விஜய் (19-Jul-19, 2:50 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 172

மேலே