அகிலன் குட்டி கதை

**** நான் வானத்தை பார்த்தேன் ****


"நான் வேலையே விட்டு போக போறேன் " என்றான் நந்தன் .
" எதுக்குடா... ? எதுக்குடா... ?" என்று பரபரப்பாக கேட்டான் முகுந்தன். முகுந்தன் பரபரப்பாக கேட்பதில் தவறில்லை நந்தனுக்கு வேலை வாங்கிக்கொடுத்ததது முகுந்தன். நந்தன் சொன்னான் நீ கடைசியாய் எப்போது வானத்தை பார்த்தாய் என்றதும் ஒரு நொடி யோசிக்க ஆரம்பித்தான் முகுந்தன். பிறகு வேகமாக வெளியே ஓடி வானத்தை பார்த்தான். மேலே சில மேகங்கள் கட்டுபாடு இல்லாமல் போய் கொண்டிருந்தன. பிறகு நந்தன் தொழிற்சாலையை விட்டு நடந்து சென்றுகொண்டிருந்தான்

நந்தன் நடந்து சென்றதும் மேகம் நகர்ந்து சென்றதும் ஒரே அளவில் இருந்தன........

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (19-Jul-19, 5:40 pm)
சேர்த்தது : AKILAN
பார்வை : 235

மேலே