ஏ- ஆளப் பார்க்கப்போறேன்

மாந்தோப்பு வாழைத்தோப்பு தென்னந்தோப்பு கட்டெறும்பு
ஊரும் கரும்புத்தோப்பு
அத்தனையிலும் மறைந்து
மறைந்து பார்க்கப் போறேன் ....////

சின்னக்குளம் பெரியகுளம்
அல்லி பூக்கும் தெப்பக்குளம்
சில்வண்டு சுற்றும் தாமரைக்
குளம் அவள் கால் நனைக்க
வரும் அத்தனை குளத்திலும்
நீந்தி நீந்தி பார்க்கப் போறேன் ....../////

குட்ட மரம் நெட்ட மரம் அடர்ந்த மரம்
வெட்டு மரம் தேன் கூடு கட்டும் மரம் அத்தனையிலும் ஏறி ஏறி நின்று
அவளின் தூரத்து வரவை நானும் பார்க்கப்போறேன் ....////

முச்சக்கர வண்டி துவிச்சக்கர வண்டி
கட்ட வண்டி புடிச்சு முட்டி மோதி ஓடி முன் வரிசையிலே இடம் பிடிக்கப் போறேன் சினிமா திரையரங்கிலும் அவளைப்
பார்க்கப் போறேன் .....////

சலவைக்கல்லிலும் சாய்ந்த படி
இருக்கும் ஆலமரத்திலும்
கோபுர வாசலிலே கட்டி இருக்கும் பழமையான கட்டிடத்திலும்
என் பெயரை அவள் பெயரை
வரைந்து நேரத்தை சிலவு
பண்ணப்போறேன் ....///////

பாதை அதைக் கடந்து விடும் போது
நேருக்கு நேர் பார்க்கப் போறேன்
என் கட்டழகைக் காட்டப்போறேன்
கட்டாயம் சம்மதம் கேட்கப்போறேன்
இன்று (ஏ) ஆளப் பார்க்கப் போறேன் ...../////

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (19-Jul-19, 8:00 pm)
பார்வை : 102

மேலே